'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

4 hours ago 3

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. அதிலும் 3-வது பாடலான 'பிரேக் அப் டா' பாடல் வைரலாகி வருகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முழு பாடல்களும் அடங்கிய ஜக் பாக்ஸ் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 'காதலிக்க நேரமில்லை' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

The love & magic that unfolded behind the cameras is all set to unfold on the big screen this Pongal. Watch the making of #KadhalikkaNeramillai ➡️ https://t.co/bBqojKEbeL In cinemas on January 14th, book your tickets now!An @arrahman musical @actor_jayamravipic.twitter.com/AxP42fwMa8

— Red Giant Movies (@RedGiantMovies_) January 12, 2025
Read Entire Article