'காதலிக்க நேரமில்லை' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

4 months ago 19

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த நவம்பர் 22-ல் வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது. 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் படத்தின் 2வது பாடலான 'லேவண்டர் நிறமே' நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதுப்போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Get ready to fall in love with #KadhalikkaNeramillai Second single #LavenderNerame out tomorrow at 5 PM Stay tuned for the magical melody!@actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @arrahman @tseriessouth @MashookRahman @AdithyarkM @shobimaster @iYogiBabupic.twitter.com/0qXK3dFxd4

— kiruthiga udhayanidh (@astrokiru) December 17, 2024
Read Entire Article