காதலர் தினத்தன்று வெளியான பவன் கல்யாண் படத்தின் அப்டேட்

3 months ago 10

சென்னை,

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர் பின்னர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் ஆகின. 

இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் முதல் பாடலான  'கேக்கனும் குருவே' ஏற்கனவே வெளியாகி உள்ளநிலையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு 2-வது பாடலுக்காக அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'எம்மனச பறிச்சுட்ட'என்ற பாடல் வருகிற 24-ம் தேதி மதியம் 3.00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/sdE8DPdK6O

— Hari Hara Veera Mallu (@HHVMFilm) February 14, 2025
Read Entire Article