காதலரை கரம்பிடித்த 'லப்பர் பந்து' பட நடிகை

12 hours ago 1

நடிகை மெளனிகா சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' படத்தில் நடித்து கவனம் பெற்றார். சின்ன திரையில் நடிகர் சந்தோஷ் நாயகனாக நடித்து வருகிறார். இவர் குறும்படத்திலும் நடித்துள்ளார். தற்போது சின்ன திரையில் நடித்துவந்தாலும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாகியுள்ளார். இவர் நடிகை மெளனிகாவை நீண்ட நாள்களாகவே காதலித்துவந்துள்ளார்.

நடிகை மெளனிகா யூடியூப் சேனல்களின் தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' படத்தில் நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார். இந்த பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சந்தோஷும் மெளனிகாவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்களை மெளனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். .ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காதல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article