காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

3 hours ago 3

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாதலங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவார்கள்.

இந்த நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் இன்று (16.01.2025) பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், MGM, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், அட்டவணை பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

மேலும், பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி / இறக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article