காணும் பொங்கலால் களைகட்டும் பொழுதுபோக்கு மையங்கள்: சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு

2 hours ago 4

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் அதிக அளவில் திரளும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி, வண்டலூர் பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு மையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். இதை கருத்தில் கொண்டு, சென்னையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, தீவுத் திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

Read Entire Article