காட்பாடி ரயில் நிலையத்தில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு; பயணிகள் அலறி ஓட்டம்

1 week ago 5

வேலூர், ஏப்.9: காட்பாடி ரயில் நிலையத்தில் உலா வந்த நல்ல பாம்பால் பயணிகள் அலறி ஓட்டமெடுத்தனர்.காட்பாடி ரயில் நிலைய பிளாட்பாரம் எண் 1ல் நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரயிலுக்காக தூக்க கலக்கத்துடன் காத்திருந்தனர். அப்போது ஒரு பயணி எதேச்சையாக பிளாட்பாரத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த நல்லபாம்பை பார்த்து அலறினார். இதை கேட்ட அங்கிருந்த பிற பயணிகள், பாம்பை பார்த்து அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர். பயணிகள் கூச்சலால் பாம்பு ரயில் நிலைய கூரையில் இருந்து மழைநீர் வழிந்தோடி வரும் பைப்பில் சென்று பதுங்கியது. இதுபற்றி தகவலறிந்த காட்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பைப்பில் பதுங்கிய பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

The post காட்பாடி ரயில் நிலையத்தில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு; பயணிகள் அலறி ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article