காட்பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் 24 மணி நேரத்தில் ரூ.1.39 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்

4 months ago 19

வேலூர்: காட்பாடியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை சோதனை சாவடியில் இன்று (அக்.23) அதிகாலை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1.39 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கான சரக்கு வாகன போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது. அதேபோல், திருப்பதி செல்லும் பெரும்பாலான வாகன போக்குவரத்தும் காட்பாடி வழியாகவே செல்கிறது. இதன் காரணமாக காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ) சார்பில் சோதனை சாவடி இயங்கி வருகிறது.

Read Entire Article