உடுமலை, பிப். 10: இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மீரா பெரியசாமி, திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை, குடிமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பண்ணை வீட்டில் குடியிருக்கும் விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதுபற்றி பலமுறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தோட்டத்து சாலையில் உள்ள விவசாயிகள் அனுதினமும் செத்துப் பிழைக்கும் நிலை உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், இந்திய விவசாயிகள் சங்கம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, வனவிலங்குகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post காட்டுப்பன்றிகளை விரட்டாவிட்டால் போராட்டம் இந்திய விவசாயிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.