கந்தர்வகோட்டை,பிப்.14: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் ஆலய ஊரணியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. ஆலயம் அருகில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியை சுற்றிலும் படித்துறை கட்டப்பட்டுள்ளது. இந்த ஊரணியை பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி குளித்தும், துணி துவைத்தும் வருகிறனர்.
ஊரணியில் கரைகளிலும் உள்புறமும் கருவை மரங்கள் மற்றும் தேவையற்ற புல், பூண்டுகள் வளர்ந்துள்ளது. மேலும் ஆகாய தாமரைக்கள் மண்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் ஊரணியை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஊரணியில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரையை அகற்றி, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காட்டுநாவல் ஊராட்சியில் பொன்னியம்மன் ஆலய ஊரணியை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.