*காட்டன் புடவைகளை வாங்கும் போதே நல்லக் கைத்தறிப் புடவைகளாக வாங்க வேண்டும். மட்டமான காட்டன் சேலைகளை வாங்கினால் சில நாட்களிலேயே பழைய புடவை போல் மாறிவிடும்.
*காஞ்சி, ராஜஸ்தான், பெங்கால், மங்களகிரி போன்ற காட்டன்கள் எப்போதும் பளிச் லுக் தரும். அகலம் குறைவாக இருந்தாலும் சுருங்காது. அயர்ன் பண்ணத் தேவையில்லை. டார்க் கலர்களை விட லைட்கலர் பெஸ்ட். நிறம் மங்காத் தன்மை அடர்கலரில் அதிகம். காட்டன் புடவை களை சரியாகப் பராமரிக்காவிட்டாலும் சீக்கிரம் சுருங்கி விடும்.
*அடிக்கடித் துவைக்காமல் இருமுறைப் பயன்படுத்திப் பிறகு துவைக்கலாம். டிரை வாஷ் செய்யக் கூடாது.
*காட்டன் புடவைகளை வாஷிங் மிஷினில் துவைக்கக் கூடாது. ஏனெனில் புடவையின் ஷைனிங் போய் விடும். நல்ல தரமானக் கஞ்சியை மிதமாகப் பயன்படுத்தினால் பல வருடங்கள் தாண்டியும் புடவைகள் பளிச்சென இருக்கும்.
*காட்டன் புடவைகளை செய்தித்தாள்கள் அல்லது உடைகளுக்கான தாள்கள் என ஏதேனும் உட்புறத்தில் பயன்படுத்தி மடித்து வைத்தால் ஒன்றுடன் ஒன்று உராயாமல் பல வருடங்களுக்கு டிசைன்கள் அப்படியே இருக்கும்.
*புடவைகளுக்குள்ளேயே பிளவுஸ்களை வைப்பதைத் தவிர்க்கவும். எம்பிராய்டரி, ஜர்தோசி அல்லது பீட்ஸ் வேலைப்பாடுகள் இருப்பின் அவை புடவையுடன் உரசி சேதப்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே பிளவுஸ்களை தனித்தனி கவர்களில்வைப்பது சிறந்தது.
– N. குப்பம்மாள்
The post காட்டன் புடவை… பராமரிப்பது எப்படி? appeared first on Dinakaran.