மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் உத்திரமேரூர் கே.எம்.ஆர்.பேருந்து நிலையம் அருகில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். அவைத்தலைவர் இனியரசு, மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் ஒன்றிய அரசுக்கு எதிராக பேசினர்.
டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், ‘‘கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு சிறப்பு கூடுதல் நிதியை ஒதுக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தின் பெயரைக்கூட சொல்லாமல் திருக்குறள் மட்டும் மேற்கோள் காட்டி ஒன்றிய நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தது, மாற்றாந்தாய் மனப்பான்மையை உண்டாக்கியுள்ளது. நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், சுகுமார், மாநில அணிகளின் நிர்வாகிகள் அன்பழகன், சுகுமார், ராமகிருஷ்ணன், சுந்தர வரதன், மாநகர செயலாளர் தமிழ்ச் செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், குமணன், சேகர், குமார், எம்.எஸ்.பாபு, கண்ணன், ஜி.தம்பு, பி.எச்.சத்யசாய், பொன்.சிவக்குமார், கே.எஸ்.ராமச்சந்திரன், ஏழுமலை, இ.சரவணன் ஏ.சிற்றரசு, பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், பேரூர் செயலாளர்கள் பாண்டியன், மோகன்தாஸ், எழிலரசன், சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, உசேன், ராஜேந்திரன், எழிலரசி சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேரூர் செயலாளர் பாரிவள்ளல் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம்; ஒன்றிய அரசின் பட்ஜெட் மாற்றாந்தாய் மனப்பான்மையை உண்டாக்கியுள்ளது: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு appeared first on Dinakaran.