காஞ்சிபுரம்: சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் மோதல்

5 hours ago 3

காஞ்சிபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நிகழ்வு நடைபெற்றது. இதற்காக சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபந்தம் பாடுவதில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. தென்கலை பிரிவினரே கோவிலில் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு முன்னுரிமை பெற்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அங்கு வந்த வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறை மற்றும் கோவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பையும் பாட அனுமதித்தனர். அதற்கு பின்னரும் பிரச்சினை செய்தவர்களை கோவிலில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றினர்.


Read Entire Article