அடிலெய்டு,
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா வீரரான பெலிக்ஸ் அகர் அலியாசிம், அமெரிக்காவின் டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பெலிக்ஸ் அகர் கைப்பற்றி வெற்றி பெற்றார். பெலிக்ஸ் இந்த ஆட்டத்தில் 7-6, 3-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.