கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு

4 hours ago 3

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் லியா லட்சுமி (வயது 4). இவள் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு சென்ற லியா லட்சுமி, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாள்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இம்மனுக்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஒரு வாரம் தங்கி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் 3 பேருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article