காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறி மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர், மனைவியை சென்று கட்டிப்பிடித்துக் கொண்டதில் தம்பதிகள் இருவரும் தீயில் எரிந்தனர்.
மறைமலை நகரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகருடன் தொடர்பு இருப்பதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் விடியற்காலை மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதிகளுக்கு 20 வயது மற்றும்15 வயதில் என இரண்டு மகள்கள் உள்ளனர்.