கெய்ரோ: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் பலியாகினர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டு வந்தனர். முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதி முடிவுற்ற நிலையில் இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. வடக்கு காசா நகரமான பெய்ட் லஹியாவின் ஒரே இடத்தில் மக்கள் கூட்டத்தை குறி வைத்து இஸ்ரேல் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு டிரோனை இயக்கிய உள்ளூர் பத்திரிகையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
The post காசா மீது இஸ்ரேல் மீண்டும் டிரோன் தாக்குதல்; 8 பேர் பலி appeared first on Dinakaran.