மதுரை, டிச. 11: காசநோய் பாதித்தவர் மீண்டும் மதுவை தொட்டதால் உயிரிழந்தது குறித்து மதிச்சியம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காசநோயாலும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெற தோப்பூரில் உள்ள காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பின்னர், மறுபடியும் குடிப்பழக்கத்தை தொடர்ந்த பாலமுருகன், மதுரை அரசு மருத்துவமனைக்குள் உள்ள சவக்கிடங்கு அருகில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்குள்ளவர்கள் மீட்டு அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அக்கா காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post காசநோய் பாதித்தவர் மீண்டும் மது குடித்ததால் சாவு appeared first on Dinakaran.