காங்கோ படகு விபத்து; பலி 78 ஆக உயர்வு; மீதமுள்ள 200 பேரின் கதி என்ன?

5 months ago 32

கோமா: காங்கோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களுடன் ஏரியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்த விபத்தின் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள கீவு ஏரியில் பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை. விபத்துப் பகுதியிலிருந்து ேநற்று 10 பேர் மட்டும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏரியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்றுவருகிறது.

நீர்வழிப் பயண விதிமுறைகள் அலட்சியம் செய்யப்படும் காங்கோவில் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி படகு விபத்துகளும் அதில் அதிக உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவருகின்றன. நேற்று மாலையுடன் 50 பேர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்துக்குள்ளான படகில் 278 பேர் பயணம் செய்துள்ளனர். திடீரென படகு மூழ்கியதால், விபத்து நடந்துள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனர்.

 

The post காங்கோ படகு விபத்து; பலி 78 ஆக உயர்வு; மீதமுள்ள 200 பேரின் கதி என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article