
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் வெள்ளகோவில் செம்மாண்டாம்பாளையம் சாலை, பெரியசாமி நகர் அருகில் இன்று (10.12.2024) காலை வெள்ளகோவில், அகலாப்பாளையம்புதூர் அரசு ஆரம்பப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த சரஸ்வதி (வயது 50) , அதே பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகலரப்பாளையம்புதூரைச் சேர்ந்த மாணவிகள் செவ்வி,ராகவி (வயது 10) மற்றும் யாழினி (வயது 8) ஆகிய இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தனக்கு முன்னால் சென்ற டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் டிரைவர் மீது மோதிய விபத்தில் த சரஸ்வதி மற்றும் செல்வி ராகவி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாழினி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50,000 ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .