மதுராந்தகம், அக்.7: மதுராந்தகம் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத நல்லிணக்க பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 49வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி 120வது பிறந்தநாள் என முப்பெரும் விழா முன்னிட்டு தமிழக முழுவதும் மத நல்லிணக்க நடைபயணம் நடைபெற்று வருகிறது.
இதில், மதநல்லிணக்க நடைபயணத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படாளம், கருங்குழி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் சத்தியசீலன், முகமது ஜாவித், கண்ணன் ஆகியோரின் ஏற்பாட்டில் மத நல்லிணக்க நடைபயண பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு மத நல்லிணக்க நடைபயணத்தை துவக்கி வைத்தார்.
இந்த மத நல்லிணக்க நடைபயணத்தில் மத்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன், ராதாகிருஷ்ணன், கிறிஸ்டோபர் ஜெயபால், மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர் கோட்டை தயார் செந்தில், மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி வேல்விழி, விவசாய அணி தலைவர் கோதண்ட ராமன், வழக்கறிஞர் அய்யனாரப்பன், விநாயகம், கிருஷ்ணன், லோகு மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post காங்கிரசார் மத நல்லிணக்க பேரணி appeared first on Dinakaran.