காங்கயம் அருகே நாய் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பரிதாப பலி

1 month ago 5

காங்கயம்: காங்கயம் அருகே உள்ள தம்மரொட்டிபாளையம் ஊராட்சி கணபதிபாளையம் பணித்தலைகாட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்த தெய்வசிகாமணி(70). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது ஆடுகளை விவசாய தோட்டத்தில் அடைத்து வைத்துள்ளார்.

நேற்று காலை சென்று பார்த்த போது நாய் கடித்து குதறியதில் 4 குட்டிகள் துடித்துடித்து இறந்து கிடந்தது. மேலும், 6 ஆடுகள் படுகாயம் அடைந்தது. இது குறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வருவாய்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காங்கயம் அருகே நாய் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article