காங். குடும்ப உரிமையாக கருதி அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை திருத்தியது: மாநிலங்களவையில் அமித்ஷா தாக்கு

2 months ago 10

புதுடெல்லி: ‘ இந்தியாவில் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் கடந்த 13, 14ம் தேதிகளில் விவாதம் நடந்தது. மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தொடங்கியது. விவாதத்தின் நிறைவு நாளான நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறைவுரையாற்றினார். அவர் பேசுகையில், ‘‘காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காக அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை.

நாட்டின் முதல் தேர்தலுக்கு முன்பாக நேரு கருத்து சுதந்திரத்தை குறைக்க முதல் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தார். அரசியலமைப்பை காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட உரிமையாக கருதி நாடாளுமன்றத்தை ஏமாற்றியது. அவர்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக மட்டுமே அரசியலமைப்பில் திருத்தங்களை செய்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்தது. அவர்கள் ஒரு குடும்பத்தை புகழ்வதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை’’ என்றார்.

The post காங். குடும்ப உரிமையாக கருதி அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை திருத்தியது: மாநிலங்களவையில் அமித்ஷா தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article