கவுன்சிலரை இடைநீக்கம் செய்த கோவை மேயர் உத்தரவு ரத்து- ஐகோர்ட்டு தீர்ப்பு

4 months ago 31

சென்னை,

கோவை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் 13-ந்தேதி மேயர் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், மேயர் அனுமதி இல்லாமல் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அடுத்த 3 கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்று இடைநீக்கம் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பிரபாகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது, ''எதிர்த்து குரல் எழுப்பியதற்காக ஒரு கவுன்சிலரை செய்வீர்களா?'' என்று மேயர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

பின்னர், கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்த மேயர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மாநகராட்சி கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் மனுதாரரும் முறையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் தரப்புக்கு கருத்து தெரிவித்தார்.

Read Entire Article