கவுதம் அதானியை ஒருபோதும் சந்தித்ததில்லை - முதலமைச்சர்

3 months ago 14
அதானி தன்னை சந்திக்கவும் இல்லை, தாமும் அவரை பார்க்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதானி - தமிழக அரசு இடையிலான மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பாக பா.ம.க.வின் ஜி.கே.மணி பேசியதை அடுத்து அவ்விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்தார். அதானியை தான் சந்தித்ததாக பா.ம.க. பொய் தகவல்களை பரப்பி அரசியலாக்குவதாகவும், அதானிக்கும் தமிழகத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அதானி மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பா.ம.க., பா.ஜ.க. ஆதரவளிக்குமா என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். 
Read Entire Article