
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது. முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் ஆழியாருக்கு கோவை மட்டுமின்றி தமிழகம், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்து கவியருவில் குளித்து மகிழ்வர்.
இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.