கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு

5 days ago 4

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி பல தலைமுறைகளாக அற்புதமான பேட்ஸ்மேன்களைக் கண்டுள்ளது. 1970- 1980-களில் சுனில் கவாஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அதன்பின் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் தெண்டுல்கர் வந்தார். தெண்டுல்கர் ஓய்வு பெற்றவுடன், விராட் கோலி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒரு முக்கிய வீரரானார்.

மூன்று பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், யார் சிறந்தவர்? என்று அடிக்கடி கேள்வி எழுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான ஆலன் லாம்பிடம் சுனில் கவாஸ்கர், விராட் கோலி, சச்சின் தெண்டுல்கர் மூவரில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " சச்சின் தெண்டுல்கர். இது எனக்கு எளிதான கேள்வி" என்று பதிலளித்தார்.

Read Entire Article