
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் கவர்னரின் தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். டெல்லிக்கு 4 நாள் பயணமாக சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து வரும் 20ம் தேதி மூலமாக சென்னைக்கு திரும்புகிறார்.
மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் புதுடெல்லி சென்றுள்ள கவர்னர் ரவி, அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. மசோதாக்கள் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கவர்னர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.