கவர்னரும், முதல்-அமைச்சரும் தோழமையுடன் அமர்ந்து பேச வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

4 months ago 14

சென்னை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்தது தொடர்பாக சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரரஜான் கூறியதாவது:-

திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துபவர்கள் திமுக. பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு வலி பிறக்கக்கூடாது. அண்ணன் சீமான் பேசிய ஒவ்வொரு கருத்தும் காலம் காலமாக பாஜக பேசிய கருத்து தான். எங்களுக்கு மகிழ்ச்சி. இனி பெரியாரின் பிம்பம் ஒவ்வொன்றாக உடையும். கவர்னரும், முதல்-அமைச்சரும் தோழமையுடன் அமர்ந்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article