சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி விசாரணையை முடித்து, ரயில்வே வாரியத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்தில், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுபோல, தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிநது, விசாரணை நடத்தி வருகின்றனர்.