கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க ரயில்வே டிஎஸ்பி-கள் தலைமையில் தனிப்படை அமைப்பு

3 months ago 22

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், 3 டிஎஸ்பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

Read Entire Article