கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் போலீசில் சரண்

1 month ago 5

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் பலருடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவன் போலீசில் சரணடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், தாய் மூகாம்பிகை நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபால்ராஜ் (33). இவர் அதே பகுதியில் காயலாங்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி பரமேஸ்வரி (26), மகள்கள் மாரிக்கனி(10), முத்துஇசக்கி(6) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், பரமேஸ்வரி பலருடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை அவரது கணவர் கோபால்ராஜ் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பை பரமேஸ்வரி கைவிடாததால் இருவருக்கும் நேற்று காலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கோபால்ராஜ் தனது மகள்கள் கண் எதிரிலேயே மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டை பூட்டி விட்டு இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு திருநின்றவூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார்.

பின்னர், போலீசில் சரணடைய போவதாகவும் தகவல் தெரிவித்தார். இதில், அதிர்ந்துபோன போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பரமேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து கோபால்ராஜ் நேற்று இரவு மணிமங்கலம் போலீசில் சரணடைந்தார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால்ராஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாடம்பாக்கத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து மனைவி கொலை: கணவன் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Read Entire Article