கள்ளக்குறிச்சி, அக். 11: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று சேலம் மெயின்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஒருமூட்டையில் 16 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கடத்துவது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வீரன்(26), ஏமப்பேர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார்(22) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு விற்பனை செய்த சின்னசேலத்தை சேர்ந்த ராஜேஷ்கான்(48) என்ற மொத்த வியாபாரியை கைது செய்து சின்னசேலத்தில் குடோனில் பதுக்கிவைத்திருந்த 63 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
ேமலும் குடோனில் புகையிலை பொருட்கள் வாங்க வந்த நீலமங்கலம் நெடுமாறன்(65) என்பவரை போலீசார் கைது செய்து அவர் வீட்டில் பதுக்கி வைத்த ஒன்றரை கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்.செய்தனர்.மேலும் ராஜேஷ்கானிடம் புகையிலை பொருட்கள் வாங்கி விற்ற கள்ளக்குறிச்சி மேல்அக்ரகார தெருவை சேர்ந்த மல்லிகைகடை உரிமையாளர் பட்டாபிராமன் மகன் பாபு(52) என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 81.400 கிலோ அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து வீரன், சதீஷ்குமார், பாபு, நெடுமாறன், ராஜேஷ்கான் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதில் ராஜேஷ்கான் உடல்நிலை சரியில்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மற்ற 4 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
The post கள்ளக்குறிச்சியில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்ற 5 பேர் கைது appeared first on Dinakaran.