
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சிலர் வேனில் சென்றுள்ளனர். அப்போது வேனின் டயர் திடீரென வெடித்து உள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த 20 பேர் வரை சிக்கி கொண்டனர். அவர்கள் விபத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்தனர். வலியில் அலறி துடித்தபடி கிடந்தனர். வேனில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அனைத்தும், தலைகீழாக கிடந்த வேனின் கூரைப்பகுதியில் கிடந்தன.
வேன் விபத்தில் சிக்கியது பற்றிய தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்பு பணிக்காக வந்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயம் அடைந்த நபர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.