கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

2 months ago 12

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே. அதில் என்ன தவறு இருக்கிறது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’’ என்று தெரிவித்து மேல்முறையிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article