
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த ஆம்புலன்சில் செல்வகுமார் என்ற நோயாளி மற்றும் அவரின் தாயார், மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் பயணித்தனர்.
நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் விறகு ஏற்றிச்சென்ற லாரி மீது பின்பக்கத்தில் இருந்து மோதியது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த நோயாளி, அவரின் தாயார், மருத்துவ உதவியாளர் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.