கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்: 2 வீடுகளில் ரூ11 லட்சம் நகை, பணம் திருட்டு

3 months ago 10

கள்ளக்குறிச்சி, பிப். 7: கள்ளக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை, ரூ.1லட்சத்து 23 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். கள்ளக்குறிச்சி அடுத்துள்ள தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் ராஜதுரை(34), டிரைவிங் ஸ்கூல் நடத்திவருகிறார். இவரது பக்கத்து வீட்டில் இவரது அத்தை வசந்தா வசித்து வருகிறார். இரண்டு குடும்பத்தினரும் நேற்றுமுன்தினம் வீட்ைட பூட்டி விட்டு, உறவினர் இறப்பு குறித்து துக்கம் விசாரிப்பதற்காக வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை அவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.

அப்போது 2 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது ராஜதுரை வீட்டில் பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை மற்றும் ₹75 ஆயிரம் பணமும், வசந்தா வீட்டின் பீரோவில் இருந்த 11.5 பவுன் நகை மற்றும் ரூ.47 ஆயிரம் பணமும் திருடு போனது தெரியவந்தது. 2 வீடுகளிலும் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து 2 வீடுகளிலும் நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜதுரை கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பரிமளா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் திருடுபோன சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்: 2 வீடுகளில் ரூ11 லட்சம் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article