உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

4 hours ago 3

மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதுவரை 9 சுற்று நடைபெற்றது. இதில் 43 பேர் தகுதி பெற்றனர். இதுவரை 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கி மாடுபிடி வீரர்கள் பரிசுகளை வென்றனர்.

மொத்தம் 545 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதில் 55 பேரை தகுதி நீக்கம் செய்தனர். தகுதியானவர்கள்490 பேர் ஆகும். அதில் 400 மாடுபிடி வீரர்கள் மட்டுமே களம் காண முடிந்த நிலையில் எஞ்சிய 90 வீரர்கள் போதிய நேரமின்மையால் சீருடை மட்டும் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் பாரம்பரியமிக்க வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட விழா குழுவும் , மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.

500 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து அலங்காநல்லூர் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் மொத்தம் 110 காளைகள் களம் கண்டது. அதில் 14 காளைகள் பிடிப்பட்டது. 2ம் சுற்றுக்கு 4 மாடுபிடி வீரர்கள் தகுதி பெற்றனர். முதல் சுற்றில் மொத்தம் 5 பேர் காயமடைந்தனர்.

2 வது சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 வது சுற்றில் மொத்தம் 211 காளைகள் களம் கண்டது. அதில் 43 காளைகள் பிடிப்பட்டது. இதில் 9 காளைகளை பிடித்து முதல் இடத்தில் அபி சித்தர் உள்ளார். 3 வது சுற்றில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர்.

4 வது சுற்றில் மொத்தம் 92 காளைகள் களம் கண்டது. அதில் 29 காளைகள் பிடிப்பட்டது. 4 வது சுற்று முடிவில் 10மாடுபிடி வீரர்கள் , காளை உரிமையாளர்கள் 06 பேர், பார்வையாளர்கள் 7 பேர் என மொத்தம் 23 பேர் காயமடைந்தனர். 5 வது சுற்று முடிவில் 10மாடுபிடி வீரர்கள் , காளை உரிமையாளர்கள் 08 பேர், பார்வையாளர்கள் 7 பேர் என மொத்தம் 25 பேர் காயமடைந்தனர்.

6 வது சுற்று முடிவில் 100 காளைகள் களம் கண்டது. அதில் 19 காளைகள் பிடிபட்டது. இதுவரை மொத்தமாக 132 காளைகள் பிடிபட்டது. அடுத்த சுற்றுக்கு 5 பேர் தகுதி பெற்றனர். மாடுபிடி வீரர்கள் 11 பேர் காளைகள் 12, பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தம் 33 பேர் காயமடைந்தனர்.

7 வது சுற்று முடிவில் 94 காளைகள் களம் கண்டது. அதில் 23 காளைகள் பிடிப்பது. மொத்தம் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் 687, அதில் இதுவரை 155 காளைகள் பிடிப்பட்டது. மாடுப்பிடி வீரர்கள் 17 பேர் காளை உரிமையாளர்கள் 15 பேர் பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 50 பேர் காயமடைந்தனர்.

8 வது சற்று முடிவில் 811 காளைகள் களம் கண்டது. இதுவரை 67 பேர் காயமடைந்தனர். மாடுப்பிடி வீரர்கள் 19 பேர் காளை உரிமையாளர்கள் 17 பேர் பார்வையாளர்கள் 31 பேர் என மொத்தம் 67 பேர் காயமடைந்தனர். 9 வது சுற்றில் 178 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

The post உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு appeared first on Dinakaran.

Read Entire Article