களக்காடு வரதராஜ பெருமாள் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்

3 months ago 8

களக்காடு,பிப்.10:களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 7ம் தேதி கோலாகலத்துடன் தொடங்கியது. முதல்நாள் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன் தினம் வரதராஜபெருமாள் கோயில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி வரதராஜபெருமாள், தேவியர்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பின் வரதராஜபெருமாள், தேவியர்களுடன் தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டார். அதனைதொடர்ந்து வரதராஜபெருமாள் விஷேச அலங்காரத்தில், தேவியர்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பக்குளத்தின் நாலாபுறமும் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்தது. 3ம் நாளான நேற்று (9ம் தேதி) களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோயில் தெப்ப விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி, பட்டி மன்றம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை தெப்ப திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

The post களக்காடு வரதராஜ பெருமாள் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article