
சென்னை ,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர்,ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
அப்போது சூர்யா பேசுகையில்,
"கல்வியே ஆயுதம் , கல்வியே கேடயம். சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட , இந்த விழா ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் வந்த இடம் இது கிடையாது. நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு அதன் வருமானத்தில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமே இது. நன்கொடையாக வரும் பணம் படிப்புக்காக மட்டுமே செலவிடப்படுகிறது" என்றார்.