சென்னை: தாயார் இறந்த நிலையில், அவரது காலை தொட்டு வணங்கிவிட்டு +2 தேர்வெழுத சென்ற மாணவரை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இதயநோயால் தாயார் உயிரிழந்த சோகத்தை மறைத்து மாணவர் சுனில்குமார் பொதுத் தேர்வு எழுதினார்.
வீட்டில் தாயின் சடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வெழுதிவிட்டு வந்து சுனில்குமார் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர்; இதுதான் தமிழ்ச் சமூகம்; கல்விதான் நம் உயிரினும் மேலானது. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
The post கல்விதான் நம் உயிரினும் மேலானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.