தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு வழங்கிய நிலையில், மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிக்க சென்னை வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று ஆளுநரை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாணவி வழக்கு விசாரணை முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.