கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டம்

21 hours ago 1

சென்னை,

மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரியின் அறிவிப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதியை உடனே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்வார்கள் என நிறுவனத் தலைவர் சா.அருணன் அறிவித்துள்ளார்.

Read Entire Article