கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி

3 months ago 22

 

திருச்சி, அக்.9: கல்லூரிகளுக்கு இடையே மாணவர்களுக்கான கபடி போட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாகத்தில் நடந்தது.
12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை 35-30 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. இதையடுத்து சென்னை, அண்ணா பல்கலைக்கழக 13வது மண்டல மாணவர்களுக்கான கபடி போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்து, மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாகம், சாரநாதன் பொறியியல் கல்லூரியை 23-22 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

The post கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article