கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

7 hours ago 1

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரியது. தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்குவதற்காக தமிழக அரசு செயல்படுத்திய முன்னோடி திட்டமே விலையில்லா மடிக்கணினி திட்டம் ஆகும். இன்றைய நவீன யுகத்தில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011ம் ஆண்டு விலையில்லா மடிக்கணினி திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த திட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரியது.

8GB RAM, 256 GB SSD Hard Disk, 14 அல்லது 15.6 இன்ச் திரை கொண்டதாக இந்த மடிக்கணினி இருக்கும். Bluetooth 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 Cell லித்தியன் அயன் பேட்டரி கொண்ட மடிக்கணிகள் முன்புறம் 720p HD Camera, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல் திறன் கொண்ட மடிக்கணினியை வாங்க தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

The post கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article