கல்லூரி மாணவர்களுக்காக 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது

6 hours ago 5

கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்முதலுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Read Entire Article