கல்பாக்கம் அருகே சுனாமி நினைவு தினம் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி

3 weeks ago 5

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கடலில், சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாளில், உறவினர்கள், பொதுமக்கம் கடலில் மலர்தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையின் கோரத் தாண்டவத்தால், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பாக்கம் நகரியம் மற்றும் சதுரங்கப்பட்டினம், மெய்யூர் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் நினைவாக கல்பாக்கத்தில், ‘சுனாமி நினைவு தூண்’ (சுனாமி பூங்கா) அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுனாமி தினமான டிசம்பர் 26ம்தேதி மீனவ அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சுனாமி பார்க்கில் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேப்போல், நேற்று சுனாமி ஏற்பட்டு 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுப்பட்டினம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தி, அங்குள்ள கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

The post கல்பாக்கம் அருகே சுனாமி நினைவு தினம் கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article