கலெக்டர் அலுவலகம் முன் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி ஆர்ப்பாட்டம்

5 hours ago 2

தேனி, மே 16: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் இளங்கோவன் கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியகுளம் அருகே குள்ளபுரத்தில் உள்ள பொதுப் பாதையில் தலித் மக்கள் கோவில் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் தடையின்றி செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு மாநில செயலாளர் முத்துராணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி மாவட்ட செயலாளர் தர்மர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெண்மணி, பெரியகுளம் தாலுகா செயலாளர் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.

The post கலெக்டர் அலுவலகம் முன் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article