தேனி, ஜூலை 8:தேனி அருகே பூமலைகுண்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமாக நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிராமத்திற்கு சொந்தமான 89 ஏக்கர் நிலங்களை தனிநபர்கள் போலி பட்டா தயார் செய்து சோலார் நிறுவனத்திற்கு காற்றாலை அமைப்பதற்காக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் கிராமத்திற்கு சொந்தமாக 89 ஏக்கர் நிலத்தை போலி பட்டா தயார் செய்து பவர் கொடுக்கப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்தும், போலி பட்டா தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து. கிராமத்தினர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.
The post கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா appeared first on Dinakaran.