கலெக்டர் அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு

3 months ago 17

 

திருப்பூர், அக். 19: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு மாணவ மாணவிகள் பலர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முதன்மை தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தில் படித்து வருகிற தன்னார்வ மாணவ மாணவிகளுக்கு நேற்று குரூப் 2 முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.

இதில் 65 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் கூறியதாவது:குருப் 2 முதன்மை தேர்வு எழுதுகிற மாணவ மாணவிகளுக்காக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து தேர்வுகள் எழுதும் போது அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். இதுபோல் மெயின் தேர்வை எழுதும் போது எளிதாக இருக்கும். முதல் தேர்வு நேற்று நடந்தது. மாதிரி தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கலெக்டர் அலுவலகத்தில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article